தற்போது வெளி வந்த  மாநாடு என்ற படம் ரசிகர்கள் மத்தியில்  வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் நடிகர் சிம்பு மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து  நடித்திருந்தனர். 

இந்த மாநாடு திரைப்படம்  சிம்புக்கு வெற்றியை தேடி தந்தது. 

இந்த படத்தில்  நடித்த எஸ்.ஜே.சூர்யா வேற லெவலில் நடித்து அனைவரையும் ஈர்த்துள்ளார்.

இவர்கள் இருவரும்  மீண்டும்  கூட்டணியாக சேர்வதாக  சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர்.  

2019ஆம் வருடம்  மலையாள மொழியில்  வெளி வந்த  படம் "டிரைவிங் லைசென்ஸ்".  

பிருத்விராஜ் மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகிய இருவரும் சேர்ந்து  நடித்திருந்தனர்.

இந்த படத்தின்  வெற்றியால்  தமிழில் ரீமேக் செய்வதாக  தகவல் வெளியாக்குகிறது.

இதனை  ரீமேக் உரிமையை  தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது. 

இந்த படத்தில்  மீண்டும் நடிகர் சிம்பு மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா கூட்டணியாக  சேர  பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருகிறது.