தளபதி  விஜய் மற்றும் நடிகர் தனுஷிற்கு  ஒற்றுமைகள் அதிகம் உள்ளன.

இன்று  சினிமாவில் முதல்  நட்சத்திரமாய் இருப்பவர்களை ஆரம்பகட்டத்தில் தமிழ் சினிமா ஒதுக்கியது. 

தளபதி விஜய் நடித்த முதல் படம்  "நாளைய தீர்ப்பு" என்ற படம்  வெளிவந்ததும் சிலர் நக்கலாக சிரித்தனர்.

அது எல்லாம் தளபதி  விஜய்யின் மனதை காயப்படுத்திருக்க நிறைய  வாய்ப்புகள் உண்டு.

அந்த சமயத்தில் 18வயது  ஆன   விஜய் இதை  எப்படி தாங்கிக்கொண்டார் என  அவருக்கு மட்டும் தான் தெரியும். 

இருந்தாலும் தன்னை விமர்சித்தவர்களுக்கு வெற்றிகளின் மூலம்  பதிலடிகொடுக்க தளபதி  ஓயாமல்  பாடுபட்டார். 

பின்  விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த தளபதி விஜய் நடித்த   "பூவே உனக்காக" என்ற படத்தை நடித்தார். 

இந்த படம் இவருக்கு வெற்றியை தேடி கொடுத்தது.   

இன்று இந்திய சினிமாவிலேயே முதல் வசூல் மன்னன் தளபதி விஜய் தான் என்று கூறுகின்றனர்.

அதை போல் தான்  நடிகர் தனுஷும்   நடித்த முதல் படம்  "துள்ளுவதோ இளமை" இந்த படத்தில் கடும் விமர்சனங்களை கேட்டார்.

அதை பார்க்காமல்  வெற்றியை  இலக்காக வைத்து  உழைத்தார். 

அதன்  காரணமாக  இன்று அவர் இந்தியா சினிமா மட்டும் அல்லாமல்  உலக சினிமாவில் முன்னணி ஹீரோவாக உள்ளார்.