Wednesday, September 28, 2022

Tamil Cinema news 2022: விமார்ச்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த தளபதி “விஜய்”….!!! நல்ல வாய்ப்பை தவற விட்ட “தனுஷ்”…..

Must Read

தளபதி விஜய் மற்றும் நடிகர் தனுஷிற்கு ஒற்றுமைகள் அதிகம் உள்ளன. இன்று சினிமாவில் முதல் நட்சத்திரமாய் இருப்பவர்களை ஆரம்பகட்டத்தில் தமிழ் சினிமா ஒதுக்கியது. தளபதி விஜய் நடித்த முதல் படம் “நாளைய தீர்ப்பு” என்ற படம் வெளிவந்ததும் சிலர் நக்கலாக சிரித்தனர்.

வெற்றி மூலம் பதிலடி கொடுத்த விஜய்

அது எல்லாம் தளபதி விஜய்யின் மனதை காயப்படுத்திருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. அந்த சமயத்தில் 18வயது ஆன விஜய் இதை எப்படி தாங்கிக்கொண்டார் என அவருக்கு மட்டும் தான் தெரியும். இருந்தாலும் தன்னை விமர்சித்தவர்களுக்கு
வெற்றிகளின் மூலம் பதிலடிகொடுக்க தளபதி ஓயாமல் பாடுபட்டார்.

பூவே உனக்காக

பின் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த தளபதி விஜய் நடித்த “பூவே உனக்காக” என்ற படத்தை நடித்தார். இந்த படம் இவருக்கு வெற்றியை தேடி கொடுத்தது. இன்று இந்திய சினிமாவிலேயே முதல் வசூல் மன்னன் தளபதி விஜய் தான் என்று கூறுகின்றனர்.

தனுஷ்

அதை போல் தான் நடிகர் தனுஷும் நடித்த முதல் படம் “துள்ளுவதோ இளமை” இந்த படத்தில் கடும் விமர்சனங்களை கேட்டார். அதை பார்க்காமல் வெற்றியை இலக்காக வைத்து உழைத்தார். அதன் காரணமாக இன்று அவர் இந்தியா சினிமா மட்டும் அல்லாமல் உலக சினிமாவில் முன்னணி ஹீரோவாக உள்ளார்.

விஜயுடன் நடிக்க தனுஷ் மறுப்பு

இந்த நிலையில் தளபதி விஜய்யுடன் தனுஷ் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை தனுஷ் வேண்டாம் என்று சில வருடங்களுக்கு முன் கூறினார். 2002 ஆண்டு தளபதி விஜய் நடித்த இயக்குனர் வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான படம் “பகவதி”. காதல் படங்களில் நடித்து வந்த தளபதி இந்த பகவதி படத்தில் “ஆக்க்ஷன் ஹீரோவாக” நடித்தார்

விஜய்க்கு தம்பியாக தனுஷ் நடித்தாரா?

பகவதி படத்தில் தளபதி விஜய்க்கு தம்பியாக நடிகர் “ஜெய்” நடித்தார். இந்த படத்தில் ஜெய்க்கு பதிலாக தனுஷை நடிக்க கேட்டுள்ளனர் . தனுஷ் சில படங்களில் நாயகனாக நடித்துள்ளேன் இனி தம்பி கதாபாத்திரத்தில் நடிப்பது சரி இல்லை என கூறிருக்கிறார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -