Wednesday, September 28, 2022

Do you know how many films he has acted in in 15 years .. ??: நடிகர் கார்த்தி நடித்த”பருத்திவீரன்” படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்…….15 வருடங்களில் எத்தனை படங்கள் நடித்துள்ளார் தெரியுமா..??

Must Read

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒரே வீட்டில் இருந்து இரண்டு பேர் முன்னணியில் இருப்பது பெருமை பட வேண்டிய விஷயம். அதில் அண்ணன் தம்பி நடித்து வருபவர்கள் சூர்யா,கார்த்தி ஆகும்.

கார்த்தி

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் உயர்ந்த போது கார்த்தி சினிமாவிற்குள் நுழைந்தார். சூர்யா மற்றும் மாதவன் நடித்த “ஆய்த எழுத்து” என்ற படத்தை மணி ரத்தினம் இயக்கத்தில் கார்த்தி உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் “பருத்திவீரன்” என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் வெளிவந்து 15 வருடம் ஆகியுள்ளது. அதன் பிறகு நடிகர் கார்த்தி ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ஆயிரத்தில் ஒருவன்

நடிகர் கார்த்தி முதல் படத்திலேயே பிரபலமானார். இவர் 15 ஆண்டுகளில் மொத்தம் 20 படம் நடித்துள்ளார், நடிகர் கார்த்தி முதல் படத்தில் நடித்து முடிந்து 3 ஆண்டுகள் ஆன பிறகு தான் இரண்டாம் படம் வெளிவந்துள்ளது. இவர் நடித்த இரண்டாவது படம் “ஆயிரத்தில் ஒருவன்” அந்த படம் பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.

நகைசுவை

இவர் தொடர்ந்து நடித்த நான் மகான் அல்ல, பையா, சிறுத்தை போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றியை தேடி கொடுத்தது. அதன் பிறகு அலெக்ஷ்பாண்டியன், சகுனி, பிரியாணி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்கள் தோல்வியை தழுவியது. இருந்தாலும் ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் சகுனி இரண்டு படங்களும் நகைச்சுவையால் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

கார்த்தியின் தடுமாற்றமும் வெற்றியும்

அதன் பிறகு “மெட்ராஸ்” படத்தின் மூலம் கார்த்தி வெற்றியை பெற்றார். அதனை தொடர்ந்து “தோழா” மற்றும் “கொம்பன்” ஆகிய படங்களில் வேற லெவலில் நடித்திருந்தார். திரும்பவும் “காற்று வெளியிட” மற்றும் “காஷ்மோரா” படத்தில் கோட்டை வீட்டார். அதனை “தீரன் அதிகாரம் ஓன்று” என்ற படத்தின் மூலம் சரி செய்து கொண்டார். அதன் பிறகு அவர் நடித்த “கடைக்குட்டி சிங்கம்” படம் அவரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று கொடுத்தது. பின் “தேவ்” படம் தொல்லிவியடைந்தாலும் “கைதி” படத்தின் மூலம் நிமிர்ந்து நின்றார். பின் வெளிவந்த “தம்பி” படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து “சுல்தான்” படத்தின் மூலம் வெற்றியை கண்டார்.

கார்த்தி தற்போது நடிக்கும் படங்கள்

நடிகர் கார்த்தி தற்போது “சர்தார்”, “விருமன்” போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து “பொன்னியின் செல்வன்” என்ற படத்தில் வந்திய தேவன் என்ற வேடத்தில் நடித்து கொண்டு வருகிறார்.

படங்களை தேர்வு செய்து நடிக்கும் கார்த்தி

நடிகர் கார்த்தியை பற்றி திரையுலகில் விசாரித்தால் அதிகம் சம்பளம் வாங்காதவர் என்று தான் கூறுவார்கள். இவர் 15 வருடங்களாக மொத்தம் 20 படங்கள் தான் நடித்திருக்கார் என்றால் அது ஆச்சரியமான ஓன்று. ஏனெனன்றால் இவருக்கு பட வாய்ப்பு நிறைய வந்தாலும் அவர் படங்களை தேர்வு செய்து தான் நடிப்பாராம்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -