Wednesday, September 28, 2022

“Cinderella” starring Roy Lakshmi: நடிகை ராய் லட்சுமி நடித்த “சிண்ட்ரெல்லா”…… மெகா ஹிட் சூப்பர் திரில்லர் திரைப்படம்…!!!! காணாதவறாதீர்கள்…..

Must Read

தமிழ் தொலைக்காட்சியில் முதல் முறையாக நடிகை “ராய் லட்சுமி” நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘சிண்ட்ரெல்லா’ . இந்த திரைப்படம் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்படுகிறது.

சிண்ட்ரெல்லா

திரில்லும் , பயங்கரமும் நிறைந்த சிண்ட்ரெல்லா திரைப்படத்தின் ப்ரீமியரை ஞாயிறு இரவு 7.00 மணிக்கு கலர்ஸ் தமிழில் கண்டு களியுங்கள். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கலர்ஸ் தமிழ் தரவிருக்கும் விருந்துக்கு தயாராகுங்கள்.

சினி ஜம்போ

நடிகை ராய் லட்சுமியின் நடிப்பில் வெளிவந்த திரில்லர் திரைப்படமான “சிண்ட்ரெல்லா”. தமிழ் தொலைக்காட்சியில் ப்ரீமியர், பிப்ரவரி 27 இரவு 7.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் வழங்கவுள்ளது. இந்த படம் எஸ் எஸ் ஐ புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் மற்றும் வினு வெங்கடேஷின் எழுத்து இயக்கத்தில் உருவான திரில்லர் படம் ஆகும். இந்த படத்தில் கதாநாயகியாக ராய் லட்சுமி நடித்துள்ளார். இந்த படத்தில் சாக்‌ஷி அகர்வால், ரோபோ சங்கர் , கல்லூரி வினோத் மற்றும் மோகன் ராமன் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளன. ராய் லட்சுமி இந்த படத்தில் அகிரா 4என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சிண்ட்ரெல்லா ஆடை

இந்த படத்தில் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி கொண்டிருந்த அகிரா ஒரு படத்திற்காக பறவைகளின் சத்தங்களை பதிவு செய்ய மலை பகுதிக்கு சென்றிருந்தாள். அப்போது அவளுக்கு நடந்த கொடுமைகள் தான் இந்த திரைப்படம் ஆகும். பின் அகிரா ஒரு கடையில் சிண்ட்ரெல்லாவின் ஆடையை கண்டு வாங்கி செல்கிறாள். அதன் பிறகு அகிராவிற்கு அமனிசியமான பல நிகழ்வுகள் நடக்கிறது. அதே சமயத்தில் காமெடிகளும் நிறைந்த ஒரு படமாக இடம் பெற்றுள்ளது.

ரோபோசங்கர், சாக்‌ஷி அகர்வால்

இந்த படத்தை பற்றி நடிகை ராய் லட்சுமி கூறியது: தமிழ் நாட்டில் முன்னணி சேனல் ஆன “கலர்ஸ் தமிழ்” இதில் என் பட ப்ரீமியர் வருகிறது ரொம்ப சந்தோசமா இருக்கு. இந்த படத்தில் ரோபோசங்கர், சாக்‌ஷி அகர்வால் என பல நடிகர்களுடன் முதல் முறையாக நடித்துள்ளேன். இந்த படம் பார்ப்பவர்களுக்கும் புடிக்கும் என்று நம்புகிறேன்.

இயக்குனர் வினு வெங்கடேஷ் கூறியதாவது:

திரைப்பட இயக்குனராக பயணத்தின் முதலடியை எடுத்து வைக்க சிண்ட்ரெல்லா திரைப்படம் மிகவும் நெருக்கமானது. கலர்ஸ் தமிழில் ப்ரீமியர் லட்சக்கணக்கான ரசிகர்களை சென்றடையும் என்று மகிழ்ச்சியாக உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -